தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்போன் கோபுரத்தில் ஏறி முதியவர் தற்கொலை மிரட்டல் - climbing cell phone tower

தென்காசி : செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவரை மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

செல்போன் கோபுரத்தில் ஏறி முதியவர் தற்கொலை மிரட்டல்
செல்போன் கோபுரத்தில் ஏறி முதியவர் தற்கொலை மிரட்டல்

By

Published : Jan 26, 2021, 12:43 PM IST

தென்காசி மாவட்டம், இடைகால் பகுதியை அடுத்த நைனாகரம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் அனைத்து சமுதாய மக்களுக்கும் பாத்தியப்பட்ட அம்மன் கோயில் உள்ளது.

இக்கோயிலில் குறிப்பிட்ட ஒரு சமுதாய மக்களை கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதிக்க மறுப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, அதற்கான கால் நாட்டும் விழா இன்று(ஜன.26) நடைபெறவிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குலசேகரன் என்ற பாக்கியராஜ் (57) அப்பகுதியில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வட்டாட்சியர் பாலமுருகன், காவல்துறையினர் தற்கொலை மிரட்டல் விடுத்த நபரிடம், இரு தரப்பு மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து மூன்று மணிநேர போராட்டத்திற்குப் பிறகு கடையநல்லூர் தீயணைப்பு வீரர்கள் முதியவரை பத்திரமாக மீட்டனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டனர். முதியவர் தற்கொலை விடுத்த நிகழ்வால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:செல்போன் கோபுரத்தில் இளைஞர் தற்கொலை மிரட்டல்

ABOUT THE AUTHOR

...view details