தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே காரிசாத்தான் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(70). முதியவரான இவர் அப்பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் மது அருந்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதே பகுதியில் உள்ள எட்டு வயது சிறுமிக்கு திண்பண்டங்கள் வாங்கி கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்தாகக் கூறி சிறுமியின் பெற்றோர் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - போக்சோ சட்டத்தில் முதியவர் கைது - முதியவர் கைது
தென்காசி: சங்கரன்கோவில் அருகே எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Old man arrested for sexual harassing 8-year-old girl in tenkasi
இதனையடுத்து காவல் ஆய்வாளர் சித்ரகலா தலைமையிலான காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கணேசன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.