தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை! - Tenkasi District News

தென்காசி: சுரண்டையில் திருமணமான சில மாதத்திலேயே இளம்பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் கழுத்தை நெரித்து கொலைசெய்யப்பட்டுள்ளார். அவரது கணவர் தலைமறைவான நிலையில் காவல் துறையினர் அவரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

women murder
women murder

By

Published : Dec 25, 2020, 2:25 PM IST

தென்காசி மாவட்டம் சுரண்டையில் உச்சி பொத்தை தெற்கு தெருவைச் சேர்ந்த வேல்சாமி என்பவரின் மகள் பூங்கோதை (20). திருப்பூர் ஆலையில் வேலை செய்யும்போது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஜோகிந்தர் என்பவரை சில மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டார்.

தற்போது அங்கு வேலை இல்லாததால் ஒரு மாதத்திற்கு முன்பு கணவன், மனைவி சுரண்டையில் வாடகை வீட்டில் தங்கி இருந்துள்ளனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது.

பூங்கோதை - கணவர் ஜோகிந்தர்
இந்நிலையில் இன்று (டிச. 25) பூங்கோதையின் வீடு பூட்டப்பட்டு சாவி வெளியே இருந்ததால் சந்தேகமடைந்து பக்கத்து வீட்டு நபர் வீட்டைத் திறந்து பார்த்தபோது வீட்டினுள் பூங்கோதை துணியால் கழுத்தை நெரித்து கொலைசெய்யப்பட்ட நிலையில் இருந்துள்ளார்.
இது குறித்து அருகில் உள்ளவர்கள் சுரண்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பூங்கோதை மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் விசாரணையில் மனைவி கொலைசெய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள பூங்கோதையின் கணவர்தான் காரணமா அல்லது வேறு யாரும் உள்ளனரா என்ற பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

ABOUT THE AUTHOR

...view details