தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புத்தாண்டு 2021: காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் - Special Dharshan in Kasi

தென்காசி: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பிரசித்திப் பெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்ததுமான காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்செய்தனர்.

காசி விஸ்வநாதர்
காசி விஸ்வநாதர்

By

Published : Jan 1, 2021, 10:33 PM IST

நாடு முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் இரவு நேர கொண்டாட்டங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது.

மேலும் கடந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்று காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளான நிலையில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.

காசி விஸ்வநாதர்

அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் பிரசித்திப் பெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்ததுமான காசி விஸ்வநாதர் ஆலயத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தென்காசி சுற்றுவட்டாரமான புளியரை செங்கோட்டை, கடையநல்லூர், பாவூர்சத்திரம், சுரண்டை என மாவட்டத்தின் பல பகுதியிலிருந்தும் வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம்செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details