நெல்லை மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரசால் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, நெல்லை மாவட்டம் அதிகளவு வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பகுதிகளில் கரோனா வைரஸ் சோதனையை உடனடியாக நடத்த அரசு சார்பில் ஆயிரம் ரேபிட் கிட்டுகள் அனுப்பிவைக்கப்பட்டன.
இதையடுத்து, நெல்லை மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கலந்துகொண்டு, ரேபிட் கிட் சோதனையைத் தொடங்கிவைத்தார் .
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாவட்டத்தில் ரேபிட் கிட் சோதனையுடன், பி.சி.ஆர். சோதனையும் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்களின் நேரடி தொடர்பிலிருந்த அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் பரிசோதனை செய்யப்படவுள்ளது.