தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசி சாதி தீண்டாமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரும் ஊருக்குள் நுழைய தடை

சங்கரன்கோவிலில் சாதி தீண்டாமை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேர் ஊருக்குள் நுழைய தடை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி சாதி தீண்டாமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் ஊருக்குள் நுழைய தடை
தென்காசி சாதி தீண்டாமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் ஊருக்குள் நுழைய தடை

By

Published : Sep 21, 2022, 1:05 PM IST

Updated : Sep 21, 2022, 2:26 PM IST

தென்காசி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த பாஞ்சாங்குளத்தில் சிறுவர்களிடம் சாதி தீண்டாமையை வெளிப்படுத்திய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் அங்கு கடை நடத்தி வரும் நிலையில் அந்த கடையில் திண்பண்டம் வாங்க சென்ற சிறுவர்களுக்கு ஊர் கட்டுப்பாடு விதித்து திண்பண்டம் கொடுக்க முடியாது என்று சிறுவர்களிடம் ஜாதி தீண்டாமையை வெளிப்படுத்தியிருந்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரமாச்சந்திர மூர்த்தி, குமார், மகேஷ்வரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வரும் நிலையில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த குற்றத்தில் தொடர்புடையவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அவர்களை ஆறு மாதம் ஊருக்குள் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் முதல் முறையாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்களை ஊருக்குள் நுழைய தடை விதிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மயிலாடுதுறையில் பேருந்து வசதி கேட்டு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

Last Updated : Sep 21, 2022, 2:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details