தென்காசி:தேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25ஆம் தேதி பின்பற்றப்படுகிறது. இதனடிப்படையில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து இன்று தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தேசிய வாக்காளர் தினம்- தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி - தேசிய வாக்காளர் தினம்
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதேபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம் நம்முடைய நலன் கருதும் மரபுகளையும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம் இனம், ஜாதி,வகுப்பு மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் அல்லது எந்த ஒரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழி ஏற்றுகொண்டனர்.
இதையும் படிங்க:தேசிய வாக்காளர் தினம் கொண்டாட்டம்!