தென்காசி: செங்கோட்டை தாலுகா பண்பொழி கிராமத்தில், ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னாவிற்கு சொந்தமான வீடு உள்ளது. இவருடைய வீட்டில், இன்று(செப்.22) அதிகாலை 3 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முகமது அலி ஜின்னா அவ்வப்போது பண்பொழி கிராமத்திலுள்ள தனது வீட்டிற்கு வந்து செல்வார். இன்றைய சோதனையின் போது அவர் வீட்டில் இல்லாத நிலையில் அதிகாலையில் வந்த 30 க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரது வீட்டில் அவரது தந்தை, சகோதரர் மற்றும் மனைவி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா வீட்டில் தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை குறிப்பாக, அவரது வீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், தற்போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு கூடிய பாப்புலர் பிரண்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பண்பொழி தைக்கா முக்கு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து 25 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் என்ஐஏ சோதனை