தென்காசி மாவட்டம் கீழ வாலியன் பொத்தைப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் 25 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் வீதிகளிலும் பேருந்து நிலையங்களிலும் ஊசி, பாசி ஆகியவற்றை விற்பனை செய்துப் பிழைத்து வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டமின்றி பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால், இவர்களது தொழில் பாதிப்படைந்ததோடு நாள்தோறும் கிடைக்கும் 100 ரூபாய் வருமானம்கூட தற்போது அவர்களுக்கு கிடைப்பதில்லை.