தென்காசி:தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரைப் பணிகளை வேகப்படுத்தியுள்ளன.
நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சியினர், தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்த வகையில், தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வின்சென்ட் என்பவர் முதற்கட்ட வாக்குச் சேகரிப்புப் பணியைத் தீவிரமாக மேற்கொண்டுவருகிறார்.
விஸ்வநாதர் கோயிலிலிருந்து பரப்புரையைத் தொடங்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வின்சென்ட்! காசி விஸ்வநாதர் கோயிலிலிருந்து பரப்புரையைத் தொடங்கிய அவர் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சாலையோர கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் துண்டறிக்கைகளை வழங்கி, அவர்களது தேவைகளைக் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க :சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களுக்குப் பதக்கங்கள்!