தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு! - கதவு உடைக்கப்பட்டு கொள்ளை குறித்து போலீஸ் விசாரணை

தென்காசி: வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை, ரூ.40 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.

சங்கரன் கோவிலில் வீட்டின் பூட்டை உடைத்து  மர்ம நபர்கள் கைவரிசை போலீஸ் விசாரணை
சங்கரன் கோவிலில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை போலீஸ் விசாரணை

By

Published : Feb 24, 2021, 5:05 PM IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாரதியார் நகர் 8ஆம் தெருவில் வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது தாயை பார்ப்பதற்காக வெளியூர் சென்றிருந்தார்.

இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 26 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். வீடு திரும்பிய வசந்தா வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சங்கரன்கோவில் போலீசில் புகாரளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்பநாயும் சம்பவ பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை பதிவு செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:பிஷன் சிங் பேடிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details