தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.60 லட்சம் தொழில் வரி கட்டாத பஸ் டிப்போ - ஜப்தி செய்ய முயன்ற அரசு அலுவலர்கள் - நகராட்சி அதிகாரிகள் ஜப்தி

சங்கரன்கோவில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையானது நகராட்சிக்கு 10 ஆண்டுகளாக ரூ.60 லட்சம் தொழில் வரி கட்டாததால், நகராட்சி அதிகாரிகள் பணிமனையை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

v
ரூ.60 லட்சம் தொழில் வரி கட்டாததால், நகராட்சி அதிகாரிகள் ஜப்தி

By

Published : Mar 23, 2022, 6:06 PM IST

தென்காசி:சங்கரன்கோவில் ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ளது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளை பணிமனை. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஊழியர்களுக்காக நகராட்சிக்கு பணிமனை ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய தொழில்வரி மற்றும் சொத்து வரியை கடந்த 2012ஆம் ஆண்டு முதல் தற்போது 2022 வரை அதாவது 10 ஆண்டுகளாக செலுத்தவில்லை.

நகராட்சி அலுவலர்கள் ஜப்தி

மொத்த வரி பாக்கி ரூ.59 லட்சத்து 87 ஆயிரத்து 945 என்று கூறப்படுகிறது. நகராட்சி சார்பில் பல முறை போக்குவரத்து பணிமனைக்கு வரி பாக்கி குறித்து கேட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் நகராட்சி நிர்வாகத்தினர் தமிழ்நாடு மாவட்ட நகராட்சி சட்டம் 124ஆவது பிரிவின்படி IVஆவது செட்டியூல்டு வரிவிதிப்பு விதிகள் 30, 31, 32 இன் படி ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று காலை நகராட்சி(பொறுப்பு) ஜெயப்பிரியா தலைமையில் நகராட்சி ஊழியர்கள் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைக்குச் சென்று கிளை மேலாளரிடம் ஜப்தி குறித்துப் பேசினர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறை அலுவலர்கள், நகர்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி மற்றும் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வந்தனர்.

வரி பாக்கியைச் செலுத்த கால அவகாசம்

தற்போது சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து வரும் நிலையில் போக்குவரத்துக் கழகப் பணிமனை ஜப்தி செய்யப்பட்டால், அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படும் நிலை உருவாகும் என்பதால், வரி பாக்கியைச் செலுத்த கால அவகாசம் கேட்கப்பட்டது.

ரூ.60 லட்சம் தொழில் வரி கட்டாத பஸ் டிப்போ - ஜப்தி செய்ய முயன்ற அரசு அலுவலர்கள்

இன்று(மார்ச் 23) மாலைக்குள் சொத்து வரி பாக்கித் தொகையை செலுத்துவதாகவும், விரைவில் தொழில் வரி பாக்கியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் கூறியதைத் தொடர்ந்து ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு நகராட்சி அலுவலர்கள் திரும்பிச் சென்றனர்.

இதையும் படிங்க:டெல்லி நிர்பயா வழக்கை மிஞ்சும் கொடூரம்: வேலூரில் மருத்துவ மாணவி பாலியல் வன்புணர்வு

ABOUT THE AUTHOR

...view details