தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடூரமாக இரண்டு குழந்தைகளை கொன்ற தாய் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல் - குழந்தையை கொன்ற தாய்

கடையநல்லூர் அருகே பிறந்து சில நாள்களேயான குழந்தைகளை அடுத்தடுத்து தாயே கொடூரமாக கொன்ற சம்பவம் பல ஆண்டுகளுக்குப் பின்பு, தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

mother killed her babies  mother killed and buried babies near tenkasi  tenkasi mother killed child  குழந்தைகளை கொன்று புதைத்த தாய்  தென்காசியில் குழந்தைகளை கொன்று புதைத்த தாய்  குழந்தையை கொன்ற தாய்  தென்காசியில் குழந்தையை கொன்ற தாய்
பச்சிளம் குழந்தைகளை கொன்று புதைத்த தாய்

By

Published : Apr 7, 2022, 8:16 PM IST

தென்காசி: கடந்த 2018ஆம் ஆண்டு, பிறந்து சில நாள்களேயான குழந்தை ஒன்று, சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிக்குளத்தில், சடலமாக மிதந்துள்ளது. இதனைக்கண்ட அக்கிராம மக்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கிராம நிர்வாகி கருப்பசாமி, காவல் துறையிடம் புகார் அளித்திருந்தார்.

அதனடிப்படையில், குழந்தையை குளத்தில் வீசிச்சென்றது யார், இதன் நோக்கம் என்ன, என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தச் சம்பவம் குறித்த விசாரணை, பல ஆண்டுகள் கிடப்பில் கிடந்த நிலையில், உயர் அலுவலர்களின் அழுத்தத்தால், மீண்டும் தீவிரமாக விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது.

திருமணத்தை மீறிய உறவு: தொடர்ந்து, தனிப்படை அமைத்து காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். மேலும் இந்தச் சம்பவம் அரங்கேறிய பிறகு நொச்சிக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து யாரேனும் வெளியேறியுள்ளனரா என கணக்கெடுத்து வந்துள்ளனர். அதில், வல்லராமபுரத்தைச் சேர்ந்த சசிகுமார் மீதும், நொச்சிகுளத்தைச் சேர்ந்த முத்துமாரி மீதும் காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

பச்சிளம் குழந்தைகளை கொன்று புதைத்த தாய்

இதையடுத்து அவர்களைப் பின் தொடர்ந்த காவல் துறையினர், கடந்த வாரம், அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது முத்துமாரி தான் குழந்தையை கொன்றார் என சசிகுமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அளித்த வாக்கு மூலத்தில் இரண்டு குழந்தைகளை முத்துமாரி கொன்றதாக கூறியுள்ளார். இதையடுத்து முத்துமாரியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது முத்துமாரிக்கு மாடசாமி என்பவருடன் திருமணம் நடந்து ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு முத்துமாரிக்கும் மாடசாமிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட, இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். கணவரைப் பிரிந்த முத்துமாரி ஒரு மகள் மற்றும் மகனுடன் நொச்சிகுளத்தில் வசித்து வந்திருக்கிறார். அப்போது, முத்துமாரிக்கும், வல்லராமபுரத்தைச் சேர்ந்த சசிகுமாருக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்து கொல்லப்பட்ட குழந்தைகள்:அதன்விளைவாக, கடந்த 2018ஆம் ஆண்டு இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. எங்கே, இந்த குழந்தையால், தங்களது உறவு வெளியே அம்பலமாகிவிடுமோ என்று எண்ணிய இவர்கள், பிறந்து ஐந்து நாள்களேயான குழந்தையை, யாருக்கும் தெரியாமல் நொச்சிகுளத்தில் வீசியுள்ளனர். பின்னர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளனர். இதேபோல் கடந்த 2019ஆம் ஆண்டும் இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையையும் கொன்று முத்துமாரி வசித்த வீடு அருகேயே புதைத்து மீண்டும் தலைமறைவாகியுள்ளனர். பின்னர் மீண்டும் ஊருக்குள் வந்த நிலையில், கடந்த வாரம் இவர்கள் காவல் துறையினரிடம் சிக்கிக்கொண்டனர்.

விசாரணைக்குப்பின்னர் இரண்டாவதாக கொல்லப்பட்ட குழந்தையை புதைத்த இடத்தில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் முத்துமாரியும், சசிகுமாரும் குழந்தையைப் புதைத்த இடத்தை அடையாளம் காட்ட, அவ்விடத்தைத் தோண்டி குழந்தையின் உடலை எடுத்தனர். பின்னர் தோண்டி எடுத்த குழந்தையின் உடலை உடர்கூறாய்வு செய்ய காவல் துறையினர் அனுப்பியுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தாய்-மகள் ஏரியில் சடலமாக மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details