தென்காசி: தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர், இராமகிருஷ்ணன். இவர் செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் முருகேஸ்வரி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து தற்போது இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில், இராமகிருஷ்ணன் கூலி வேலைக்குச் சென்று சிறுக, சிறுக சேமித்து வீட்டில் வைத்திருந்த பணத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு தேடிப் பார்த்தபோது அந்தப் பணம் காணாமல் போய் இருந்துள்ளது. உடனே, இது குறித்து அவரது மனைவியிடம் கேட்டுள்ளார். அப்பொழுது, அந்தப் பணத்தை முருகேஸ்வரி தான் எடுத்ததாகவும் அதை அருகிலுள்ள ஒரு சிலர் கேட்டதால் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த இராமகிருஷ்ணன் அவசரத் தேவைக்காக நான் சிறுக, சிறுகச் சேமித்து வைத்தத் தொகை எப்படி 'நீ எடுத்துக் கொடுப்பாய்?' என்று கூறி முருகேஸ்வரியிடம் பிரச்னையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், முருகேஸ்வரி கோபத்தில் கணவரிடம் சண்டை போட்டுவிட்டு தனது தகப்பனார் வீட்டிற்குச் சென்ற நிலையில், நேற்று முன்தினம் சமாதானம் செய்து அவரது உறவினர்கள் இராமகிருஷ்ணன் வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர்.