தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படுவோரை பாதுகாக்கும் திமுகவிற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி சார்பில் நவம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை வேல் யாத்திரை மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.
தென்காசி வேல் யாத்திரையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு - நயினார் நாகேந்திரன் - yn bjp conduct vel yatra against dmk
தென்காசி: பாஜக சார்பில் நடைபெற உள்ள வேல் யாத்திரையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூர் வரை நடைபெறும் இந்த வேல் யாத்திரை தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று தென்காசி மாவட்டத்தில் பாரதிய ஜனதாவின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் வேல் யாத்திரை தொடர்பான ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் நிர்வாகிகளுடன் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நகேந்திரன், “தென்காசியில் நடக்க இருக்கக்கூடிய வேல் யாத்திரையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. யாத்திரை வருகைக்கான வரவேற்பு, பொதுக்கூட்டம் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மனுதர்மம் மட்டுமல்ல, பொதுவாகவே அரசியல் கட்சி தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசாமல் இருப்பது நல்லது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அதனை பாஜக வரவேற்கும்“ எனக் கூறினார்.