தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 29, 2022, 10:55 PM IST

ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி... செங்கோட்டையில் நூற்றுக்கும் அதிகமான விநாயகர் சிலைகள் தயார்

செங்கோட்டையில் கோயில்கள், பொதுஇடங்களில் பிரதிஷ்டை செய்ய நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளன.

செங்கோட்டையில் நூற்றுக்கும் அதிகமான விநாயகர் சிலைகள் தயார்
செங்கோட்டையில் நூற்றுக்கும் அதிகமான விநாயகர் சிலைகள் தயார்

தென்காசி: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிறன்ற 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்காசி மாவட்டம், செங்கோட்டை காலாங்கரை பகுதியில் நூற்றுக்கும் அதிகமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

இங்கு நூற்றுக்கணக்கான சிலைகள் தயாரிக்கும் பணிகள் முடிவுற்று தற்போது விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. குறிப்பாக 2 அடி முதல் 12 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள், பரமசிவன்-பார்வதி ஆகியோருடன் விநாயகர் இருப்பது, பல்வேறு வாகனங்களில் கம்பீரமாக வீற்றிருப்பது, சிங்கத்தின் மீது அமர்ந்து இருப்பது என்று பல விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது சிலைகள் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

நூற்றுக்கணக்கான சிலைகள் விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ளன. அவற்றின் உயரத்தைப் பொறுத்து ரூ.3 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறு செய்யப்படும் விநாயகர் சிலைகள் கேரளாவுக்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் விநாயகர் சிலைகள் கொண்டு செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டு, தற்போது பக்தர்களுக்கு விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

செங்கோட்டையில் நூற்றுக்கும் அதிகமான விநாயகர் சிலைகள் தயார்

இதையும் படிங்க:பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா.. தமிழ் சினிமாவின் எவர்கிரீன் விநாயகர் பாடல்கள்...

ABOUT THE AUTHOR

...view details