கரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க கோரி தென்காசி ரயில் நிலையம் முன்பு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து 50 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர்.
பயணிகள் ரயிலை இயக்கக் கோரி ம.ம.க ஆர்ப்பாட்டம்!
தென்காசி: கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தின்போது தென்காசி முதல் கோவை வரை புதிய இரயிலை இயக்க வலியுறுத்தியும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள செங்கோட்டை முதல் மதுரை வரை மற்றும் செங்கோட்டை முதல் திருநெல்வேலி வரையிலான ரயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.