தென்காசி: செல்போன் டவரின் உச்சியில் ஏறிய மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை காவல், தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
சேந்தமரம் அருகே உள்ள கள்ளம்புளி கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (26). மனநலம் பாதிக்கப்பட்டவரான இவரை இன்று(அக்.1) அதிகாலை அவரது குடும்பத்தார்கள், உறவினர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், வீட்டில் உள்ள பொருட்களை உடைத்துவிட்டு அப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.