தென்காசி மாவட்டம் கடையநல்லூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் செல்லத்துரை(55). இவர் தனது வீட்டுக்கு அருகில் மாட்டு தொழுவம் வைத்துள்ளார்.
இந்தத் தொழுவம் உள்ள பகுதி திருவாவடுதுறை ஆதீனம் மடத்துக்கு பாத்தியப்பட்ட நிலமாக உள்ளது. அங்குதான் செல்லத்துரை மாடு வளர்த்து வந்தார்.
இதையடுத்து அவர் பயன்படுத்தி வரும் இடத்தின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த கொல்லி மாடசாமி (57) என்பவருக்கும் சொந்தமாக திருவாவடுதுறை ஆதின மடத்துக்கு பாத்தியப்பட்ட நிலம் உள்ளது. செல்லத்துரை இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய, கொல்லி மாடசாமி பல்வேறு முயற்சி மேற்கொண்டு வந்ததாகவும், ஆனால் அவர் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், கடந்த ஒரு வாரமாக கொல்லி மாடசாமி, நிலம் தொடர்பாக செல்லத்துரையிடம் தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது.
இதைத்தொடர்ந்து செல்லத்துரை வழக்கம்போல் வீட்டுக்கு எதிரில் உள்ள மாட்டு தொழுவத்தில் மாடுகளுக்கு உணவை வைத்துவிட்டு நேற்று (ஜூலை 30) இரவு நேரத்தில் நாற்காலியில் அமர்ந்துள்ளார்.
அப்போது அந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கொல்லி மாடசாமி உள்ளிட்ட சிலர், செல்லத்துரையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.