தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆவுடையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழன். தற்போது பாட்டத்தூர் பகுதியில் தனது மகன், மகள்களுடன் வாழ்ந்துவந்தார். இவர் மீது அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் நேற்று (மார்ச் 27) உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, சங்கரன்கோவில் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.