நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், மதுபானக் கடைகள் மூடப்பட்டு, அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே கால நிர்ணயத்துடன் இயங்கும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
மதுக்கடைகள் பூட்டப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே மது விற்பனை சட்டவிரோதமாக நடைபெற்றுவருகிறது. எனவே, காவல் துறையினரும் கிடைக்கக்கூடிய தகவலின் அடிப்படையில் சட்டவிரோதமாக மதுவிற்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.