தென்காசி மாவட்டம், செங்கோட்டை அடுத்த இரவியதர்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி அப்துல் காதர். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகனான சர்புதீன் கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியில் லாட்டரி சீட்டு வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கும் கேரள மாநிலம் அடூர் பகுதியைச் சேர்ந்த சபினா என்பவருக்கும் திருமணமாகி பர்வேஷ் முஷரப் (15) என்ற மகன் உள்ளார். இவர், கடந்த 17ஆம் தேதி லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்துவிட்டு, அருகிலுள்ள மற்றொரு லாட்டரி கடையில் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரியை ரூ. 300 பணம் கொடுத்து வாங்கினார்.