தென்காசி:சங்கரன்கோவில் சூரங்குடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி திருமலைச்சாமி. இவரது மகன் தர்மராஜ் கோயம்புத்தூரில் உள்ள சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டில் படித்து வந்தார்.
பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த தர்மராஜ் கிராமத்தில் உள்ள அவரது விவசாய கிணற்றில் நீச்சல் பழகுவதற்காகக் கயிறு கட்டி நீந்தக் கற்றுக் கொண்டிருக்கும் போது கயிறு அறுந்தது.இதனால் செய்வதறியாது கிணற்று நீரில் தத்தளித்த மாணவர் தர்மராஜ் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.