தென்காசி:மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள குற்றால அருவியானது இயற்கை எழில் கொஞ்சும் அழகும், ஆன்மிக வரலாறு உடைய நீர்வீழ்ச்சியாகும். குறிப்பாக, தற்போதைய தலைமுறையினருக்க குற்றாலம் என்றால் அது ஒரு சுற்றுலா தளம், குளிப்பதற்கு இதமான உள்ள ஒரு அருவி என்று தான் தெரியும். ஆனால் குற்றாலம் என்றால் புராணத்தில் தெய்வீக பூமி என்று இன்னொரு வரலாரும் உள்ளது.
குறிப்பாக தென் பொதிகை மலையில் உள்ள குற்றாலத்தில் அகஸ்தியர் உள்ளிட்ட பல்வேறு முனிவர்கள் வாழ்ந்ததாகவும், அவர்கள் தினமும் குற்றால அருவி கரையில் புனித நீராடி அங்கே அமர்ந்து தியானங்களில் ஈடுபட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. அதற்கு சான்றாய் பல்வேறு சாட்சியங்கள் உள்ள சூழலில், தற்போது குற்றால அருவியானது ஆன்மீக வழிபாட்டு தளமாக இருந்ததற்கான சான்றுகள் வெளிப்படையாகியுள்ளது.
குறிப்பாக, வருடம் தோறும் குற்றாலம் அருவியில் நீர் குறையாமல் கொட்டி வரும் சூழலில், கடந்த சில மாதங்களாக தென்காசி மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கோடை மழை கூட பெய்யாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றால அருவியானது தற்போது வறண்டு ஒரு சொட்டு நீர் கூட அருவியில் கொட்டாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. எப்பொழுதும், நீர் கொட்டி வரும் குற்றால அருவிக்கு உட்பகுதியில் உள்ள காட்சிகளை சுற்றுலா பயணிகளோ, அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்களோ பார்த்திருக்க வாய்ப்பில்லை.