தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய விழாவை குறைந்த பக்தர்களுடன் நடத்திட முடிவு! - Tenkasi kasiviswanatha swamy Temple official

தென்காசி: காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ஐப்பசி திருக்கல்யாண விழா கொடியேற்றத்தை, குறைந்த அளவிலான பக்தர்களுடன் நடத்திட கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

kasi
kasi

By

Published : Nov 1, 2020, 4:42 PM IST

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ததும்மான காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மாசிமகம் திருவிழா, ஐப்பசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

ஆனால், இந்தாண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு உத்தரவுபடி குறைவான பக்தர்களுடன் உலகம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் 16 வகை மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடத்திட திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து பேசிய இந்து சமய அறநிலைய துறை அலுவலர்கள், "விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 9ஆம் தேதியும்,திருக்கல்யாண விழா வரும் 11ஆம் தேதியும் உலகம்மன் சன்னதில் நடைபெறும். இதுமட்டுமின்றி, தினந்தோறும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் உள் பிரகாரத்தில் வீதி உலா நடைபெறும்" என தெரிவித்துள்ளனர்.

மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கையாக கொடியேற்றத்தை மறுநாள் Tenkasi kasiviswanatha swamy Temple official என்னும் யூட்டிப் சேனலில் பக்தர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details