தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் சம உரிமை - கனிமொழி எம்பி - நகர திமுக கழக செயலாளர் சாதிர்

சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமான உரிமைகளை திமுக வழங்கிக் கொண்டிருப்பதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

Kanimozhl
கனிமொழி எம்.பி

By

Published : Aug 19, 2021, 7:42 AM IST

தென்காசி மாவட்டத்தில் நகர திமுக கழகச் செயலாளர் சாதிர் இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. திருமண விழாவிற்கு திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்தார். விழாவில் திமுக மகளிரணித் தலைவியும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, "தமிழ்நாட்டில் சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவருக்குமான உரிமைகளை திமுக வழங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்க, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களே காரணம்.

மணமக்களுடன் கனிமொழி எம்பி

தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழ தமிழ்நாட்டு மக்களிடையே உள்ள ஒற்றுமையும் சகோதரத்துவமே காரணம்" என்றார்.

சாதிர் இல்லத் திருமண விழாவில் கனிமொழி எம்பி

நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம். குமார், சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா, திமுக கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:கோடநாடு கொள்ளை: சயான் வாக்குமூலத்தால் சிக்கும் எடப்பாடி?

ABOUT THE AUTHOR

...view details