தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழையால் நிரம்பிய கடனாநதி அணை - தென்காசி மாவட்டம் நிரம்பியது

தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக கடனாநதி அணை நிரம்பியது.

கனமழையால் நிரம்பிய கடனாநதி அணை
கனமழையால் நிரம்பிய கடனாநதி அணை

By

Published : Nov 18, 2020, 3:20 PM IST

தென்காசியில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. முதலில் மாவட்டத்தில் மழை லேசாக பெய்தது. வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன்படி தென்காசி மாவட்டம் ஆலங்குளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக லேசான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்துவந்தது.

கனமழையால் நிரம்பிய கடனாநதி அணை

இதன் காரணமாக செங்கோட்டை பகுதியில் 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை, கடையம் அருகே 85 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணை ஆகியவை நிரம்பின. மேலும் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்தும் அப்படியே வெளியேற்றப்பட்டுவருகிறது.

இதனால் அடவிநயினார், கருப்பாநதி, ராமநதி உள்ளிட்ட அணைகளிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துவருகிறது. இதன் காரணமாக அணைகளின் வாயிலாக பாசனம் பெறக்கூடிய விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வந்தடைந்த ஆந்திர உபரி நீர்!

ABOUT THE AUTHOR

...view details