தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருணாப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் தேங்காய் வியாபாரி பூமணி. இவர் தனது மனைவியோடு நேற்று முன்தினம்(பிப்.22) மதுரைக்கு சென்றுள்ளார். மகன் சங்கர் புங்கம்பட்டியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
மதியத்திற்கு மேல் வீடு திரும்பிய சங்கர், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியைடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 50 சவரன் தங்க நகை, 1 லட்ச ரூபாய் பணம் திருடு போனது தெரிய வந்தது.