கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கேரளத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியில் கேரளத்திலிருந்து தமிழ்நாடு வரும் பேருந்துகளுக்கும், வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது.
மேலும் பொதுமக்களுக்கும் காய்ச்சல் சோதனை சுகாதரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் புளியரை சோதனை சாவடியில் சுகாதரத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர்தயாளன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுனாசிங் ஆகியோர் பார்வையிட்டனர்.
தமிழக - கேரள எல்லை சோதனை சாவடியில் தீவிர சோதனை இதில் கேரளாவிலிருந்து வரும் தமிழ்நாடு வாகனங்களில் வரும் பொதுமக்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து பின் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.