தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் 274 வாக்குச் சாவடிகள், 91 துணை வாக்குச் சாவடிகள் என மொத்தம் 365 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களான 438 கண்ட்ரோல் யூனிட் பேலட் இயந்திரங்கள் மற்றும் 478 விவிபேட் இயந்திரங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனி அறையில் பலத்த காவல் துறையினரின் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்! - சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்
தென்காசி: சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.
இதனை கோட்டாட்சியர் முருகசெல்லி அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் திறந்தார். இதைத்தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கியது. இதற்காக அலுவலகத்தில் மண்டல துணை தேர்தல் அலுவலர்கள், சின்னம் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தப் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் முருகசெல்வி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் மாரியப்பன் மற்றும் திமுக சார்பில் நகரச் செயலாளர் சங்கரன் உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் நேரில் பார்வையிட்டனர்.