தென்காசி:சங்கரன்கோவிலில் புதிதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ரூ 2.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டாட்சியர் அலுவலகத்தில் நீதிமன்ற அரங்கு, கூட்ட அரங்கு, கணிப்பொறி அறை, கோட்டாட்சியர் மற்றும் அலுவலர்கள் அறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.
கோட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தை சுற்றி 12 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்த அலுவலகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.