தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் : இருவர் கைது - புகையிலை பொருட்களை பறிமுதல்

தென்காசி : தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், இருவரைக் கைது செய்துள்ளனர்.

In tenkasi gudka seized and two person arrested
In tenkasi gudka seized and two person arrested

By

Published : Dec 1, 2020, 10:52 PM IST

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கப்பட்டு மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உத்தரவின்பேரில் தீவிர சோதனை அடிப்படையில் அவை பறிமுதல் செய்யப்பட்டு வந்தன.

அந்த வகையில் இன்று (டிச.01) தென்காசி, புதுமனை இரண்டாம் தெருவில் காவல் துறை ரோந்துப் பணியின் போது அப்பகுதியில் உள்ள நூரூள் அமீன் என்பவருக்குச் சொந்தமான குடோனில் சோதனை செய்ததில் அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதேபோல் அப்பகுதி அருகில் ஐயப்பன் என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனை செய்ததில் அங்கும் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து தென்காசி காவல் துறை ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில், உதவி ஆய்வாளர் மாதவனும் பிற காவலர்களும் அங்கிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க...விவசாயிகள் போராட்டம்: பாஜக தலைவர் வீட்டில் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details