தென்காசி மாவட்டம் கடையம் அருகே வெங்கடாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் திருமாறன். இவர் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பல ஆண்டுகளாக தனது சொந்த கிராமத்தில் அறக்கட்டளை நடத்தி அதன் மூலம் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவரது இல்லத்தில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி உள்ளனர். திருமாறனின் தந்தை ராமச்சந்திரன் (எ)பூங்குன்றன் தாய் ராதாபாய் இருவரும் மலேசிய நாட்டில் ஆசிரியராக பணிபுரிந்தனர். திருமாறன் பிறந்த ஆறு மாதமே ஆன நிலையில், அவரது தந்தை பூங்குன்றன் உடல்நலக் குறைவால் காலமானார். மூன்று வயது வரை திருமாறன் தனது தாயுடன் மலேசியாவில் வசித்து பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.
தந்தையின் கல்லறையை தேடி மலேசியா சென்ற சமூக ஆர்வலர் அடுத்த சில ஆண்டுகளில் திருமாறனின் கல்லூரி பருவத்தில் அவரது தாய் ராதாபாயு உயிரிழந்துள்ளார். அவருக்கு தனது வெங்கடாம்பட்டி இல்லத்தில் கல்லறை எழுப்பியுள்ளார். பூங்குன்றன் ராதாபாய் தம்பதிக்கு ஒரே மகனான திருமாறன் மலேசியாவில் உயிரிழந்த தனது தந்தையின் கல்லறை எங்கே இருக்கிறது என்று தெரியாமல் கடந்த 55 ஆண்டுகளாக தவித்து வந்துள்ளார்.
தந்தையின் கல்லறையை தேடி மலேசியா சென்ற சமூக ஆர்வலர் வழக்கமாக நமது ஊர்களில் கல்லறைகள் தொடர்ந்து பராமரிக்கப்படாமல் இருந்தால் காலப்போக்கில் அவை காணாமல் போய்விடும். எனவே தனது தந்தையின் கல்லறையும் காலத்தால் அழிந்திருக்கும் என்று திருமாறன் எண்ணியுள்ளார். இருப்பினும் எங்காவது ஒரு மூலையில் இன்னும் தனது தந்தையின் கல்லறை துளிர்த்திருக்காதா, வாழ்நாளில் ஒருமுறையாவது அதை நாம் பார்த்து விட மாட்டோமா என்ற ஏக்கம் திருமாறனுக்கு இருந்துள்ளது.
தந்தையின் கல்லறையை தேடி மலேசியா சென்ற சமூக ஆர்வலர் ஆனால் கல்லறையை கண்டுபிடிப்பதற்கான வழிமுறை தெரியாமல் குழப்பத்தில் இருந்தபோது, அவரது இல்லத்தில் தங்கியுள்ள சிறுவர்கள் தற்போதைய இணையதள வசதி குறித்து அவரிடம் பேசியுள்ளனர். அதற்கு திருமாறன், ’ஏதோ கூகுள் கூகுள் என்கிறீர்களே அந்த கூகுளால் எனது தந்தையின் கல்லறையை கண்டுபிடித்து தர முடியுமா...? என்று விளையாட்டாக கேட்டுள்ளார்.
உடனே மாணவர்கள் முயற்சியோடு கூகுள் மூலம் திருமாறன் தந்தையின் கல்லறை தேடினர். அதன்படி மலேசியாவில் திருமாறன் குடும்பம் வாழ்ந்த பகுதியான கேர்லிங்க் தோட்டம் என்ற பெயரில் கல்லறைத்தோட்டம் இருக்கிறதா என கூகுளில் சர்ச் செய்துள்ளனர். அப்போது கேர்லிங் தோட்ட கல்லறையின் படங்கள் வந்துள்ளது. அதில் திருமாறன் தந்தை கல்லறையின் படமும் அவரது பெயர் மற்றும் புகைப்படத்துடன் காண்பித்ததைக் கண்டு திருமாறன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
தந்தையின் கல்லறையை தேடி மலேசியா சென்ற சமூக ஆர்வலர் 55 ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாத தனது தந்தை கல்லறையை ஒரே நிமிடத்தில் கூகுள் கண்டுபிடித்து தந்து விட்டதே என்று எண்ணி நெகிழ்ச்சி அடைந்துள்ளார். மேலும் உடனே மலேசியாவுக்கு சென்ற திருமாறன் அங்கே தனது தந்தையின் மாணவர்கள் உதவியோடு கல்லறையை நேரில் கண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டுள்ளார். மேலும் கல்லறைக்கு மாலை அணிவித்து சிறிது நேரம் கல்லறை முன்பு அமர்ந்து தனது தந்தையை நேரில் கண்டது போன்ற உணர்வை அடைந்துள்ளார்.
இதனிடையே திருமாறனின் இந்த கல்லறை தேடல் சம்பவத்தை கேள்விப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை வாழ்த்தி தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அதில், ”மனிதன் உணர்ச்சி குவியல்களால் ஆனவன் அன்பின் தேடலில் தான் நம் வாழ்வின் பயணம் அமைகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் திருமாறனின் சமூகப் பணியையும் பாராட்டியுள்ளார். முதலமைச்சரின் வாழ்த்து திருமாறனுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இது குறித்து திருமாறன் நம்மிடம் கூறும்போது, ”பிழைப்புக்காக எனது தந்தை மலேசியா சென்றார். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் கல்லூரி படிப்பு முடித்த அவர், மலேசியாவில் ஆசிரியராக பணிபுரிந்தார். அப்போது நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு உயிர் இழந்தார். எனது தாய் அவருக்கு கல்லறை கட்டி விட்டு சில ஆண்டுகளில் இந்தியா திரும்பி விட்டார். நான் தந்தையை நேரில் பார்த்ததில்லை.
எனவே அவரது கல்லறையையாவது பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். கூகுள் இணையதளம் மூலம் கல்லறையை கண்டுபிடித்துள்ளோம், மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனது உணர்வுக்கு மதிப்பளித்திருப்பது கண்டு வியக்கிறேன். இதன் மூலம் அவர் தந்தை பாசத்தில் தவிக்கிறார் என்பதை உணர முடிகிறது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இதையும் படிங்க:பிராங்க் வீடியோ எடுத்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை