தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நேற்று (செப். 9) அதிகாலை எரிந்த நிலையில், பிறந்து நான்கு நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று சடலமாக கிடந்தது. இதனையடுத்து இது குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன் கோவில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த கோமதிக்கும் கண்டியபேரியைச் சேர்ந்த சங்கருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கத்தின் காரணமாக இருவருக்கும் நெருக்கமடைந்துள்ளனர். இதனால் கோமதி கர்ப்பமானதாகவும் தெரியவந்துள்ளது.