தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தியாகி இம்மானுவேல் சேகரனின் 65ஆவது குரு பூஜை: தென்காசி மாவட்ட திமுக அலுவலகத்தில் அனுசரிப்பு - தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகம்

தியாகி இம்மானுவேல் சேகரனின் 65ஆஆவது குரு பூஜை இன்று(செப்.11) தென்காசி மாவட்ட திமுக அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட திமுக அலுவலகத்தில் அனுசரிப்பு
தென்காசி மாவட்ட திமுக அலுவலகத்தில் அனுசரிப்பு

By

Published : Sep 11, 2022, 6:42 PM IST

தென்காசிதெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 65ஆவது குரு பூஜை இன்று(செப்.11) அனுசரிக்கப்பட்டது. தியாகி இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்ட மாவட்டச்செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது வீரவணக்கம் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்த குரு பூஜை நிகழ்ச்சியில் ஒன்றியச்செயலாளர்கள் அழகு சுந்தரம், சீனித்துரை, வழக்கறிஞர் பிரிவு அணி அமைப்பாளர் வேலுச்சாமி, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சாமி துரை, காசிமேஜர்புரம் பஞ்சாயத்து தலைவர் குற்றாலம் இசக்கி பாண்டி, கூட்டுறவு சங்கத்தலைவர் சுரேஷ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

தியாகி இம்மானுவேல் சேகரனின் 65ஆவது குரு பூஜை: தென்காசி மாவட்ட திமுக அலுவலகத்தில் அனுசரிப்பு

இதையும் படிங்க:பாரதியாருக்கு மரியாதை செலுத்திய ஆளுநர்

ABOUT THE AUTHOR

...view details