தென்காசி பாவூர்சத்திரம் பகுதியில் பழக்கடை நடத்திவருபவர் முருகன். இவருக்குத் திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் திரிச்சுழி பகுதியைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்ணுடன் வியாபாரம் செய்ய சென்றபோது பழக்கம் ஏற்பட்டு அவரை பாவூர்சத்திரம் அழைத்துவந்து கடந்த 9 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவந்தார் .
ஏற்கனவே சித்ராவுக்குத் திருமணமாகி மூர்த்தி என்ற கணவரும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்துவருவதாக தெரிகிறது. அதில் ஒரு பையன் மூர்த்தியுடன் இருக்கிறார். சித்ராவுடன் மகள் விஜயலட்சுமி வந்துவிட்டார்.
இந்த நிலையில், விஜயலட்சுமிக்கு முருகன் அவ்வப்போது பாலியல் ரீதியான துன்பங்களைக் கொடுத்துவந்துள்ளார். இதனைத் தொடர்ந்து விஜயலட்சுமி தாயிடம் கூறவே அவர் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரைத் தொடர்ந்து ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இரண்டு தரப்பையும் விசாரணைக்கு வரச் சொல்லியுள்ளார்.