தென்காசி: ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டி கண்ணாடிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி இவரது மனைவி இசக்கியம்மாள் இந்த தம்பதிக்கு பல ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாத நிலையில் வேலுச்சாமி இளநீர் வியபாரம் செய்து வருகின்றார்.
இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகனுக்கும், வேலுச்சாமியின் மனைவி இசக்கியம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவால் மாறியதாகவும் இதனை அறிந்த வேலுச்சாமி தனது மனைவி இசக்கியம்மாளை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வேலுச்சாமி தன் மனைவி இசக்கியம்மாளை அழைத்துக்கொண்டு கிராமத்தில் இருந்து வெளியேறி கயத்தாறு பாரதி நகர் பகுதியில் குடியேறியுள்ளார். சொந்த ஊரில் இருந்து கயத்தாறு வந்தாலும் வேலுச்சாமிக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் இருந்து வந்ததாகவும், இதனால் கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசக்கியம்மாள் கணவரை பிரிந்து கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் இருந்து வந்த வேலுச்சாமி இதற்கு காரணமான முருகனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.