தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சேர்ந்தமரம் பகுதியில், ராதாகிருஷ்ணன்- மோகனா தம்பதியினர் வசித்து வந்தனர். இருவரும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், சிறு சிறு கூலி வேலைகளுக்கு சென்று வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், இருவரும் நள்ளிரவில் ஒன்றாக சேர்ந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.
நள்ளிரவில் கணவனும் மனைவியும் தீக்குளித்து தற்கொலை - தென்காசி மாவட்டம்
நள்ளிரவில் கணவனும் மனைவியும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Husband
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சேர்ந்தமரம் போலீசார், உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனும் மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.