தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களைக் கண்டித்து பட்டினிப்போராட்டம்

தென்காசி: மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களைக் கண்டித்து ஆலங்குளத்தில் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

பட்டினிப் போராட்டம்
பட்டினிப் போராட்டம்

By

Published : Sep 22, 2020, 8:06 AM IST

ஊரடங்கு காலத்தில் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் உள்பட பல்வேறு பகுதிகளில் மகளிர் சுயஉதவிக்குழு பெண்களிடம் மைக்ரோ பைனான்ஸ் எனும் நுண்நிதி நிறுவனங்கள் கடன் தொகையைக்கேட்டு மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் ஆலங்குளத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தாலுகா தலைவர் அழகு சுந்தரி தலைமையில், மாவட்ட செயலாளர் கற்பகம் ஆகியோர் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆலங்குளம் காமராஜர் சிலை அருகே பட்டினிப் போட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஊரடங்கு காலம் முடியும் வரை, மைக்ரோ பைனான்ஸ் நுண்நிதி நிறுவனங்கள் கடன் தவணைத்தொகை மகளிர் குழு திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்; சுயஉதவிக்குழுக்களிடம் பெறப்பட்ட அனைத்து ஆவணங்களையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும்; ஊரடங்கு காலத்தில் உள்ள வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்; தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களை ரத்து செய்ய வேண்டும்; பெண்களுக்கு கொலை மிரட்டல் - பெண்களை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குத் தூண்டும் நுண்நிதி நிறுவன பொறுப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

கரோனா பரவல் 144 தடை உத்தரவு காரணமாக போராட்டத்திற்கு காவல் துறையினரின் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னி வளவன் தலைமையில் ஆய்வாளர் சந்திரசேகர் போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பட்டினிப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தால் காவல் துறையினர் மாதர் சங்க முக்கிய நிர்வாகிகள் உள்பட 100க்கும் மேற்பட்ட பெண்களைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details