தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, அண்மையில் ஏழு சாதி உள்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஏழு உள்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கறுப்புச்சட்டை அணிந்து மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய, மாநில அரசை விலியுறுத்தி கோஷங்களை எழுப்பி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், கட்சியின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கறுப்புச்சட்டை அணிந்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
அதே போல், தென்காசியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் கறுப்புச்சட்டை அணிந்து மனிதச்சங்கிலியில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் லாரன்ஸ் தலைமையில், மத்திய, மாநில அரசை விலியுறுத்தி கோஷங்களை எழுப்பி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.