தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிப் பரவலாக பெய்து வருகிறது. குமரிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன்கூடிய கனமழை! - Tenkasi rain
தென்காசி: கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிவதைத்த நிலையில், இன்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகளும் , பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டிவதைத்து வந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதன் காரணமாக, இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான ஆலங்குளம், சுரண்டை, கடையநல்லூர், குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்டப் பகுதிகளில் இடி, மின்னலுடன்கூடிய கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக, சாலையின் இருபுறமும் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம், வெகுவாக உயரத் தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.