தூத்துக்குடி: அனுமதி பெறாமல் இயங்கி வரும் தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவபாரத இந்து மக்கள் இயக்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் மனு அளித்துள்ளார். ஆனால் ஆட்சியர் செந்தில் ராஜ் அவர் மீது மனுவை தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அரை நிர்வாணத்துடன் பாலசுப்பிரமணியன் போராட்டம் நடத்தினார். மேலும், அவர் கூறுகையில், தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேலவன் வித்யாலயா கல்வி நிறுவனம் சட்டத்தை மீறி அனுமதி பெறாமல் இயங்கி வருகிறது.
இப்பள்ளி மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காதது ஏன்? அந்த நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித் துறை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், சிப்காட் தொழிற்பேட்டையில் வரம்பு மீறி பள்ளியை கட்டியுள்ளனர்.