தென்காசியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர் சந்திப்பு தென்காசிமாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா முன்னிலை வகித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, "பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்த நிலையில், தமிழ்நாடு அமைச்சர்கள் பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்க என்று முழக்கத்துடன் காலையில் எழுகின்றனர்.
ஏனென்றால் கரும்பு கொள்முதல் மூலம் ஊழல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. கடந்த 60 நாட்களில் 140 கொலைகள் நடந்த நிலையில், தமிழ்நாடு இதுவரை கண்டிராத மோசமான அரசாக உள்ளது. தமிழ்நாடு ஆளுநரையே ஒருமையில் பேசிய முதலமைச்சர், அது குறித்து வருத்தம் கூட தெரிவிக்காத நிலையில், இந்த அரசு எப்போது ஒழியும் என மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனையில் திருடிய செங்கலை ஒப்படைத்துவிட்டு, ஓ.பன்னீர்செல்வம் பற்றிய விமர்சனம் உள்பட மற்றவற்றை குறித்து பேசலாம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:60 ஆண்டுகள் கழித்து கட்சி இடத்தை மீட்ட காங்கிரஸ்; பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!