தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குண்டார் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி - அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்

தென்காசி மாவட்டத்தில் உள்ள குண்டார் அணை நிரம்பியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குண்டார் அணை நிரம்பி வழிவதால்  விவசாயிகள் மகிழ்ச்சி
குண்டார் அணை நிரம்பி வழிவதால் விவசாயிககுண்டார் அணை நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சிள் மகிழ்ச்சி

By

Published : Jul 5, 2022, 1:27 PM IST

தென்காசி:செங்கோட்டை அருகே உள்ளது குண்டார் அணை. சுமார் 36.10 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றுவருகின்றன. இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சில நாட்களாக மழைபெய்துவருகிறது. இதனால் அணையில் நீர்மட்டம் உயர்ந்துவந்தது.

அந்த வகையில் இன்று (ஜூலை 5) அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவான 36.10 அடியை எட்டியுள்ளது. அணையிலிருந்து 7 கன நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. இதனால், செங்கோட்டை, இலஞ்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள நிறைகுளம், செங்கோட்டை குளம், மேல கொட்டா குளம், கீழக்கொட்டாகுளம் உள்ளிட்ட 13 குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது.

இந்த குளங்கள் மூலம் நேரடியாக 1,022 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக 700 ஏக்கர் நிலங்களும் மேலான பயன்பெற உள்ளன. இதனால், அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குண்டார் அணை நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

இதையும் படிங்க:தென்காசியில் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

ABOUT THE AUTHOR

...view details