தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் லஞ்சம்: ஊழியர் பணியிட மாற்றம்! - hospital staff bribery in tenkasi

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் படுக்கை வசதி செய்து தருவதற்கு 50 ரூபாய் லஞ்சம் வாங்குவதாக வெளியான வீடியோவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஊழியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அரசு மருத்துவமனையில் லஞ்சம்
அரசு மருத்துவமனையில் லஞ்சம்

By

Published : Jul 27, 2020, 3:21 PM IST

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகள் உள்ளன. செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சிகிச்சைக்காக அம்மருத்துவமனைக்கு சென்றுவருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு தவிர பிற நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுவந்தது. அதனால் அங்கு பணிபுரியும் ஊழியர் கணேசன் 50 ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு படுக்கை வசதி ஏற்பாடு செய்து கொடுத்து வந்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் லஞ்சம்

அதனை ஒருவர் காணொலியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அது வைரலாகியது. அதனடிப்படையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஊழியர் கணேசனை சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்தார்.

இதையும் படிங்க:லஞ்சம் கொடுக்காததால் முட்டை வண்டியை தள்ளி விட்ட அலுவலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details