தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவமனைகளில் அனைத்து வித நோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்படும் - ஆட்சியர் தகவல்

தென்காசி: மாவட்டத்தில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர்

By

Published : Oct 10, 2020, 2:35 AM IST

தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக ஏழு ஆயிரத்து 572 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தென்காசி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை முகாமில் வைத்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 211 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா அச்சம் காரணமாக பிற நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்த்து வந்தனர்.

மேலும் மருத்துவர்கள் கரோனா பணிகளில் ஈடுபட்டதன் காரணமாகவும் பிற நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவது இல்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் அரசு தலைமை மருத்துவர்கள், சுகாதாரத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் நடைபெற்றது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அறிக்கையில், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு தொடர் நடவடிக்கைகளின் காரணமாகவும், பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாகவும் தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது.
எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பொது மருத்துவமனைகளிலும் அனைத்து விதமான நோய்களுக்கும் உரிய சிகிச்சைகள் மற்றும் நோய்களுக்கான மாத்திரைகளை வழக்கம்போல் வழங்கப்படும்.
தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் ரத்த சுத்திகரிப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதில் இதுவரை 60க்கும் மேற்பட்ட நோயாளிகள் ரத்த சுத்திகரிப்பு வசதி பெற்றுள்ளார்கள்.
எனவே ரத்த சுத்திகரிப்பு செய்ய தேவைப்படும் நோயாளிகள் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டு அறை எண் 04633-290548 என்ற தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details