தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

விவசாயிக்கு எதிரான வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும் என்ற ஒற்றைக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Dec 8, 2020, 7:46 PM IST

தென்காசி: மத்திய அரசு புதியதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில், தொடர்ந்து 10 நாள்களுக்கு மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் நடைபெறும் விவசாய போராட்டத்திற்கு தமிழ்நாட்டிலும் பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தென்காசி மாவட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 50க்கும் அதிகமான அரசு ஊழியர் சங்கத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

இதையும் படிங்க:விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் நடைபயண பேரணி!

ABOUT THE AUTHOR

...view details