தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (18), அவரது நண்பர் மாரியப்பன் (18). இவர்கள் இருவரும் இன்று மாலை கிருஷ்ணாபுரத்தில் இருந்து தென்காசிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது இடைகால் அருகே உள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் வரும்போது செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு செல்லும் அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.