தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 31, 2022, 10:26 PM IST

ETV Bharat / state

அரசு அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அகற்றம்

கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை காவல்துறையினர் அகற்றியுள்ளனர்.

அரசு அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் காவல்துறையினர் அகற்றம்
அரசு அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் காவல்துறையினர் அகற்றம்

தென்காசி:நாடு முழுவதும் இன்று (ஆக.31) விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. மேலும் அரசு அனுமதி வழங்கிய இடத்தில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அரசு அனுமதியுடன் வைக்கப்பட்டுள்ளன. மேலும் சேந்தமரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கள்ளம்புளி, சின்னத்தம்பி நாடாரூர் ஆகிய கிராமங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.

அரசு அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் காவல்துறையினர் அகற்றம்

மேலும் இந்த இரு கிராமங்களில் அனுமதி வழங்கப்படாத இடத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து சேந்தமரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் காவல்துறையினர் விரைந்து வந்து அனுமதி இல்லாத இடத்தில் விநாயகர் சிலைகள் வைக்க கூடாது என்று அறிவுரை வழங்கி இந்த முன்னணி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

காவல்துறையினரின் பேச்சுவார்த்தையை தொடந்து சிலைகள் பாதுகாப்பாக மற்ற இடங்களுக்கு அகற்றப்பட்டன. மேலும் அரசு அனுமதி வழங்கிய இடத்தில் மட்டுமே சிலைகள் வைக்க வேண்டும் அவ்வாறு அனுமதி இல்லாத இடங்களில் சிலைகள் வைத்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:விநாயகர் சதுர்த்தியையொட்டி, பால்குடம் எடுத்து முளைப்பாரி ஊர்வலம்

ABOUT THE AUTHOR

...view details