தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரத்தில் கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கிவருகிறது. இதில் சுமார் 900க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு சிறு சேமிப்பு, வைப்பு நிதி, நகைக்கடன், விவசாய கடன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுவருகின்றன. இதில் பெரும்பாலானோர் லட்சக்கணக்கான ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் உறுப்பினர்கள் தமது கணக்கில் உள்ள சேமிப்புப் பணத்தை எடுக்கசென்றபோது, கணக்கில் வைப்புத் தொகை இல்லை என்று வங்கியில் கூறியுள்ளனர். இச்சம்பவத்தை அறிந்த பலர் தங்களது கணக்குகளை சரிபார்த்தபோது கணக்குகளில் சிறு தொகை தவிர பெரும் தொகைகள் எடுக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.